உசிலம்பட்டியில் தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.,உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகளும், 200 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருந்ததை கண்டறிந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா-வை பறிமுதல் செய்த போலீசார்.,இது தொடர்பாக தேனியைச் சேர்ந்த கணபதி, காமேஷ், விஜயபாண்டி, போஸ் என்ற 4 பேரையும் கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்., கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து விற்பனை செய்ய காத்திருந்தாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் கல்லூரி மாணவர்களுக்கு ஏதும் தொடர்பு உள்ளதா?, போதைக்கு மாணவர்கள் அடிமையாகத வண்ணம் மாணவர்களை காப்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
You must be logged in to post a comment.