சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் பாலச்சந்தர் (45), நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியில், பிற வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வங்கியில் கூடமலையைச் சேர்ந்த சேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரது வங்கிக் கணக்கில் 84 சவரன் போலி நகைகள் வைக்கப்பட்டு அதன் மூலம் 41 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கெங்கவல்லி காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் மித்ராதேவி புகார் அளித்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment.