இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ள பதப்படுத்திய கடல் அட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் முருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி தீவிர சோதனையில் வேதாளை தெற்கு தெரு ராஜா முஹமது(40) என்பவரது வீட்டில் யாருமில்லாத நிலையில் வீட்டின் பின்புறம் பதப்படுத்தி சாக்கு மூடைகளில் இருந்த 611 கிலோ கடல் அட்டையை கைப்பற்றினர். இது தொடர்பாக ராஜா முஹமது மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment.