மண்டபம் மீனவர் 8 பேருக்கு டிச.20 வரை நீதிமன்ற காவல்: ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கீழமண் குண்டு பத்தரப்பன், ரெட்டையூரணி கண்ணன், சின்ன ரெட்டையூரணி முத்துராஜ், அகஸ்தியர் கூட்டம் காளி, தங்கச்சிமடம் யாசின், சேசு, உச்சிப்புளி ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 பேரை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் இன்று ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஷாலினி மீனவர் 8 பேரையும் டிச. 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!