கடையநல்லூரில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலசை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வலசை காலனி தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் மனோ ரஞ்சித்(20), லிங்கம் என்பவரின் மகன் பாரத்(19), முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் மகாபிரபு(18), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன்(18) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன் அறிவுறுத்தினார். இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் ராஜா சமர்பித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









