ராமேஸ்வரம் தெற்கு கரையூரைச் சேர்ந்த அழகு மகன் கருப்பையா. இவர் அப்பகுதியில் இறால் பண்ணை நடத்துகிறார். இதிலிருந்து வெளியேறு மீன் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் சவுந்தரராஜன், தலையாரி ஆகியோர் விசாரித்தனர். இறால் பண்ணைக்கு மீண்டும் அ மதி வழங்க கருப்பையாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். 18.09.2004, 22.09 2004 ஆகிய நாட்களில் இந்த பணப்பேரம் நடந்தது. ரூ.3 ஆயிரம் தருவதாக கருப்பையா சம்மதித்தார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் கருப்பையா புகார் கொடுத்தார். போலீசார் ஆலோசனை பேரில் 24.09.2004 ல் கருப்பையாவிடம் இருந்து வாங்கிய ரூ.3 ஆயிரத்தை தலையாரி நாகரத்தினம் தாசில்தார் சவுந்தரராஜனிடம் கொடுத்தார். அப்போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு நீதிபதி சிவபிரகாசம் முன்னிலையில் இன்று வந்தது. இதில் தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, தாசில்தாருக்கு ரூ.3 ஆயிரம், தலையாரிக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு நிலுவையால் தொடர்பாக பணப்பலன் பெறாமல் சவுந்தரராஜன், தலையாரி இருவரும் பணி நிறைவு அடைந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










