இராமநாதபுரம்,அக்.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு கடற்பகுதிக்கு நேற்று காலை வந்த பைபர் படகில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போலீசாரின் தொடர் விசாரணையில் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் 50, ரோஷன் (எ) ஜெகன் 27 ஆகியோர் எனவும் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 2 பேரும் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச்சென்றனர். இலங்கையில் குற்றச்செயல்பட்ட இவர்களை மன்னார் மாவட்ட போலீஸார் தேடத்துவங்கினர். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து மர்மப்படகில் வந்து மண்டபம் முகாமில் மீண்டும் தஞ்சமடைய முயன்றது தெரியவந்தது. இதன்படி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









