மதுரை  திருப்பரங்குன்றம் தாலுகாவில் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வே உதவி ஆய்வாளர் கைது..

மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 

3 மாதங்களாக நடவடிக்கை இல்லாததால் சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமாரை அணுகியபோது, ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் கிருஷ்ணன் புகார் செய்துள்ளார். போலீசார் அறிவுரைபடி நேற்று மதியம் தாலுகா அலுவலகத்திற்கு கிருஷ்ணன் சென்றபோது, பிரேம்குமார் அங்கு இல்லை. அலைபேசியில் கிருஷ்ணன் தொடர்புகொண்டபோது அழகப்பன் நகர் பீல்டிற்கு வந்துள்ளதால் அங்கு வருமாறு கூறினார். அங்கு சென்ற கிருஷ்ணனிடம் ரோட்டோர மரத்தின்கீழ் லஞ்சம் வாங்கிய பிரேம்குமாரை இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!