மதுரையில் ரேஷன் அரிசியை  கடத்திய நபர் வாகன தணிக்கையில் போலீசார் கைது..

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் வானமாமலை நகர் ரேஷன் கடையில் நேற்று நண்பகலின் போது மர்ம நபர்களால் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவியதை அடுத்து அரிசி மூடைகளை கடத்தப்படுவதாக உணவு வழங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஜீவாநகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெய்ஹிந்து புறத்தை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 28) என்பவர் இருசக்கர வாகனத்தில் அரிசி மூடைகளுடம் போலீசாரிடம் பிடிபட்டார்.  தொடர்ந்து அவரிடம் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் தற்பொழுது மாட்டியுள்ள கூலிக்கு வேலை பார்ப்பவர் மட்டுமே முக்கியமான நபரை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை கடத்துவதற்கு உதவிய பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் உடைய கோரிக்கையாக உள்ளது மேலும் இது போன்ற செயல்கள் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!