ஆர் எஸ் மங்கலத்தில் 270 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் சிக்கினர்..

ராமநாதபுரம், அக்.8- ஆர்.எஸ் மங்கலம் அருகே வாகன சோதனையின்போது 270 புகையிலை பொருட்களுடன் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்ட னர். ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் சர்ச் முன் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அது வழி வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் பின்புறம் கூலிப் 20 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ,  கணேஷ் புகையிலை 194 கிலோ,  உள்பட 270 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாகனத்தில் ஏற்றிவந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோழியார்கோட்டை  மாரிகிருஷ்ணன் மகன் சித்திரவேல் 23, புல்லமடை மேற்கு தெரு ராஜகுமார் 44  ஆகியோர் மீது வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!