மதுரை மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 19 இருசக்கர மற்றும் ஒரு டிராக்டர் வாகனம் திருடிய இருவர் கைது; கரிமேடு போலீசார் நடவடிக்கை..

மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வைகை ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அந்த வண்டிக்கான எந்தவித ஆவணங்களும் இல்லாத இருந்துள்ளது தொடர்ந்து இருவரும் முன்னுக்கு முரணாக போலீசாரிடம் தெரிவித்ததில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது என தெரிய வந்தததைடுத்து அவர்களை கரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது

அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ், ராமு மகன் ராஜபாண்டி என தெரியவந்தது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் 19 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு டிராக்டர் திருடி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் இந்த திருட்டு சம்பவத்தை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான கரிமேடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் சிறப்பு கடைநிலை காவலர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!