இராமநாதபுரம், செப்.8- ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் டோஜோ லியோன் 45. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். இந்நிலத்தில் உள்ள உயரழுத்த மின்வழி தடத்தை வேறிடம் மாற்றுவதற்கு மதிப்பீடு தயாரிக்க ராமேஸ்வரம் மின் வாரிய மின் வணிக ஆய்வாளர் அருள் மரிய டார்சனை, அணுகினார். மொத்த மதிப்பீடு ரூ.1.30 லட்சமாகும். இதில் தனக்கு ரூ.5 ஆயிரம் தருமாறும் டோஜா லியோனிடம் அருள் மரிய டார்சன் கேட்டார். இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் டோஜோ லியோன் இன்று காலை புகாரளித்தார். இதனை தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய 500 நோட்டுகளாக ரூ.5 ஆயிரத்தை அருள்மரிய டார்சனிடம், டோஜோ லியோன் இன்று மாலை கொடுத்தார். அப்போது ராமேஸ்வரம் மின் வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி ராமச்சந்தின் , இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள் மரிய டார்சனை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான தகவல்/புகார்களுக்கு *டி.எஸ்.பி – 94986 52169* *இன்ஸ்பெக்டர் (1) – 94986 52166* *இன்ஸ்பெக்டர் (2) – 94986 52167* தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









