இராமநாதபுரம், செப்.8- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு ஐஸ் எனும் போதைப பொருள் கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வேதாளை எம்ஜிஆர் நகரில் உள்ள வீடு ஒன்றில் மண்டபம் போலீசார் சோதனை நடத்தினர். அந்த வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ மெத்தம்பேட்டமைன் எனும் ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான சூடை வலை குச்சு பகுதியைச் சேர்ந்த சேதுராஜா மகன் நாககுமார் 20 மற்றும் நாகு மகன் சக்திவேல் 23 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் எனும் மெத்தம்பேட்டமைன் போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









