மதுரையில் வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது !!!

மதுரை மாநகர் இ3.அண்ணாநகர் ( ச.ஓ ) காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிமாரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு அழகுபாண்டி மற்றும் மதன்குமார் ஆகியோர் மதுரை வண்டியூர் சங்குநகர் பாலம் அருகே போதை பொருள்தடுப்பு சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது காலை 08.30 மணிக்கு அந்த வழியாக வந்த TN 59 BH 8518 என்ற பதிவெண் கொண்ட TATA Ace வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது வாகனத்தின் ஒட்டுனர் ரவி, தமிழ்குமார், முருகன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரை விசாரணை செய்த போது மேற்படி நால்வரும் TATA Ace வாகனத்தில் சென்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இனம் தெரியாத நபரிடம் இருந்து சுமார் 6.200 கி.கிராம் போதைப் பொருளான கஞ்சாவினை கடத்தியது அறியப்பட்டது.

பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு வாகனத்தையும் கஞ்சாவினையும் பறிமுதல் செய்து , வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!