இராஜபாளையம் அருகே கூனங்குளம் பகுதியில் கடந்த 29.06.20 நடந்த கொலை சம்மந்தமாக வடமாநில தொழிலாளி கைது…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கூனங்குளம் பகுதியை சேர்ந்த வேலுமணி சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார் வேலுமணி கடந்த 29.06.2020 நீட்ட நேரம் வீட்டுக்கு வரத நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் ஊரின் எல்லையில் தலையில் கல்லை போட்டு படு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் இயங்கும் மில்லில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த குமார் எல்லப்ப தேவர் கொண்டா என்பவர் வேலுமணி என்பவரை பல நாட்களாக நோட்டமிட்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் வேலுமணியை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக கொலை குற்றவாளியை கைது செய்த போலீசார் விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!