இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் அருகே எம்.சாலை கிராமத்தில் தாயாருடன் தூங்கிய நான்கு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கடலாடி அருகே எம்.சாலை கிராமத்தில் தாயாருடன் இரவு தூங்கிய 4 வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது அருகில் தூங்கிய தன் குழந்தையை மாய மானதால் அப்பெண் எழுந்து தேடியபோது, பக்கத்து வீட்டில் உடலில் காயங்களுடன் அழுதவாறு பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அப்பெண் அறிந்து கொண்டார். இது குறித்து கமுதி மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி கந்தசாமியை இன்ஸ்பெக்டர் தேவசங்கரி கைது செய்தார். இந்த கொடுஞ்செயலால் காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


You must be logged in to post a comment.