அசாமில் ‘கிஸ்ஸிங் பாபா’ அதிரடி கைது…:

அசாம் மாநிலத்தில், பெண் பக்தர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, ஆசி வழங்குவது போல் மோசடி செய்த, ‘கிஸ்ஸிங் பாபா’ என்ற போலி சாமியார் கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு பிரகாஷ் சவுகான், 31, தன்னை ஒரு விஷ்ணு பக்தர் என்றும் தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாகக் கூறியும் பிரசாரங்களை மேற்கொண்டார்.

இதை நம்பி அவரிடம் ஆசி பெற வருவோரை, கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, அருளாசி வழங்குவது அவரது வழக்கம். பெண் பக்தர்களுக்கும் இந்த முறையில் தான் ஆசி வழங்குவார். நாளுக்கு நாள் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்ததை அடுத்து, உள்ளூர், ‘டிவி’ சேனல், சாமியார் ராமு பிரகாஷ் சவுகானின் நடவடிக்கையை படம் பிடித்து ஒளிபரப்பியது.

இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தின. ராமு பிரகாஷ் சவுகானை, சிலர், ‘கிஸ்ஸிங் பாபா’ என சமூக வலைதளமான, ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல் பரபரப்பினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் ராமு பிரகாஷ் சவுகானை கைது செய்தனர். மேலும், சவுகானுக்கு உடந்தையாக இருந்து பிரசாரம் செய்த அவரது தாயாரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!