திருச்சுழி அருகே தங்கையை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது…

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழக்கண்ட மங்கலத்தைச் சேர்ந்த வீரபாண்டி இவரது மனைவி சந்திரமதி. இவர்களுடைய மகன் கணேஷ் பாபு (23)லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

அவரது தங்கை அம்சவள்ளி (20) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், அவரும் அதே ஊரைச் சேர்ந்த முருகேச பாண்டி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கணேஷ்பாபு தனது தங்கையை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் தங்கை அம்சவள்ளி காதலனை கைவிட மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷ் பாபு தங்கை அம்சவள்ளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் பாபு தனது உடன்பிறந்த தங்கை அம்சவள்ளியைக் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய கணேஷ்பாபுவை திருச்சுழி இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், திருச்சுழி அருகே காட்டுப் பகுதியில் தலைமறைவாக ஒளிந்திருந்த கணேஷ் பாபுவை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணேஷ் பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!