பூட்டிய வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 23 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..

கடந்த 2018 –ம் வருடம் டிசம்பர் மாதத்தில் இரவு மதுரை உத்தங்குடி, அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் 43/18, என்பவர் தனது குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் பின்கதவை உடைத்து 23 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக E1 புதூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்தஆர்.

அப்புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி இன்று (22.03.2019) இவ்வழக்கில் ஈடுபட்ட குற்றவாளியை தேடி மேலூர் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது போலீஸை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்தபோது மதுரை உத்தங்குடி, அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகாமுனி என்பவரின் மகன் பிரவீன் 21/19 என்பது தெரியவந்தது. மேலும் மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி.வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!