தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் வளைகுடா வனக்காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வன அலுவலர் ரகுராமன் தலைமையிலான வனக்காப்பக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 250கிலோ எடைகொண்ட இறந்த பவளப்பாறைகள் 5 மூட்டைகள், மற்றும் உயிருடன் உள்ள மூளை வடிவ 40 பவளப்பாறைகள்,கிளைவடிவ பவளப்பாறை 10, விசிறிவடிவ பவளப்பாறை 20,பஞ்சுவடிவ பவளப்பாறை 10, மேசை வடிவ பவளப்பாறை 5, என பவளப்பாறை வகைகளை பறிமுதல் செய்தனர்.
உயிருடன் கைப்பற்றிய பவளப்பாறைகளை வன காப்பக அதிகாரிகள் கடலில் உள்ள தீவு பகுதியில் விட்டனர். இது தொடர்பாக அண்ணா நகரை சேர்ந்த இளஞ்செழியன், கற்குவேல், விஜயன் ஆகிய 3பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









