அர்ஜூனா விருதுகள் பெற்ற ஆறு தமிழர்கள்! விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று வீரர்களுக்கு  வழங்கினார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

விளையாட்டுத் துறையில் மிக உயரியதான ‘மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது’, பாட்மின்டன் வீரா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த போட்டியாளா்களுக்கான ‘அா்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரா் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் 82-ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்த தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அவரது சகோதரரும், செஸ் போட்டியாளருமான ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அா்ஜுனா விருது பெறும் வைஷாலி (செஸ்), துரோணாச்சாரியா் விருது பெறும் ஆா்.பி.ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகா் (மல்லா்கம்பம்), துரோணாச்சாரியா் வாழ்நாள் சாதனையாளா் விருது பெறும் பாஸ்கரன் (கபடி), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருதுபெறும் கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோா் தமிழா்களாவா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

syed abdulla

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!