தமிழகம் முழுவதும் 144தடை உத்தரவு அமலில் உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வகுரணி சந்தைப்பட்டி, கல்லூத்து, பெருமாள்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள அரளிப்பூக்கள் தற்போது
நல்லவிளைச்சலை கண்டு பூக்கள் அதிகம் பூக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அரளிப்பூக்களை சாகுபடி செய்து உசிலம்பட்டி பூசந்தைக்கு எடுத்து சென்றால் பூ சென்டு கம்பெனிக்கு மல்லிகைப்பூக்களை மட்டும் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் அரளிப் பூக்களை வாங்க பொதுமக்கள் இல்லாததால் பூவியாபாரிகள் அரளிப்பூக்களை வாங்குவதில்லை. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் அரளிப்பூக்களை பறிக்காமல்; செடியிலேயே மலரவிடும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அரளிப்பூக்களுக்கு செலவழித்த கூலி கூட கிடைக்கவில்லை என அரளி பூக்களை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே போன்று தான் ஊரடங்கு உத்தரவால் செவ்வந்தி, கோலிகொண்டை போன்ற பூக்களையும் பறிக்காமல் செடியிரேயே பூக்களை விவசாயிகள் மலரவிடுகின்றனர்.இதனால் அரளிப்பூக்கள் செடியிலேயே பறிக்காமல் விடுவதால் பூக்கள் மலர்ந்து வண்ணமயமாக அழகாக காட்சியளிக்கிறது.ஆனால அரளிப்பூக்களை பயிரிட்ட விவசாயிகள்தான் வேதனையடைந்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









