இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பார்வையற்றோர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிறர் உதவியின்றி செல்ல ஜிபிஆர்எஸ் கருவி கண்டுபிடித்த மண்டபம் வட்டாரம் கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து ரூ10 ஆயிரம் பரிசு வென்றனர்
இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று பாராட்டினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் உடனிருந்தனர்.
.
You must be logged in to post a comment.