மருத்துவ துறையில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்று..

இராமநாதபுரம், செப்.30- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவப்பணிகள் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழா நடந்தது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பேருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பான சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை-பரமக்குடி, ராமநாதபுரம் கனகமணி மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியவற்றிற்கு பாராட்டு சான்றிதழ், 5 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, 5 பேருக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டை, சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, மக்கள் ஆரோக்கிய திட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கினார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) முருகேசன் (பரமக்குடி), அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், மருத்துவப்பணிகள்  இணை இயக்குநர்  சகாய எஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!