இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா நகர் ( தண்ணீர் பந்தல்) துவக்கப்பள்ளியின் வளர்சிக்கு உறுதுணையாக செயல்பட்டவர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று நன்றி பாராட்டு விழா நடந்தது. பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உறுதுணையாகவும், மாணவர்கள் நிழலில் அமர்ந்து கல்வி பயில பள்ளி கட்டடங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கு ஊராட்சி மூலம் கூடாரம் அமைத்து கொடுத்தமைக்காகவும் பள்ளி வளாக வெந்நிலப்பகுதி முழுவதையும் ஊராட்சி மூலம் தளம் அமைத்து கொடுத்தமைக்காகவும் ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ், துணைத்தலைவர் ஜாஹீர் அப்பாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்பள்ளி மாணவ மாணவியர் 140 பேருக்கு தலா 2 ஜோடி சீருடை , 2 ஜோடி கால் உறை, இரு ஜோடி சூ வழங்கிய மலேசியாவை சேர்ந்த Good People Club தொண்டு அமைப்பை சேர்ந்த நாகூர் பாய், அவரது மனைவிக்கும், மலேசிய Good People Club தொண்டு நிறுவனத்தை இப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை சேவையை செய்ய தூண்டுகோலாக செயல்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆசிக் ஆகியோருக்கு நன்றி பாராட்டப்பட்டது.

பள்ளி வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் Ervadi Educational Charitable Trust தலைவர் செய்யது அபுபக்கர் பாதுஷா, சமூக சேவகர் நல்லான் (எ) நல்ல இபுறாகிம் ஆகியோருக்கு பள்ளி சார்பில் நன்றி பாராட்டப்பட்டது. தமிழக தலைமை செயலர் (பணி நிறைவு) வெ.இறையன்பு எழுதிய வையத் தலைமை கொள், ஓராயிரம் சிறகுகள், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் ஆகிய புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் துல்கருணை பாட்ஷா, தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









