மதுரையில் விபத்தை தடுக்க மெக்கானின் ஒத்துழைப்புடன் சூரிய ஒளி விளக்கு… பெண் போக்குவரத்து காவலரின் புதிய முயற்சி…..

மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் என்பவரின் முயற்சியில் விபத்தை தடுக்கும் வண்ணம் மதுரை கோவலன் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் உருவாக்கிய சூரிய ஒளியில் ஒளிரும் விளக்கு மதுரை திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையின் நடுவே அமைத்துள்ள தடுப்பின் மேல் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டது.

இது முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய ஒளிரும் விளக்கானது முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா தனியார் மருத்துவமனை எதிராக, பசுமலை காவல் சோதனைச் சாவடி அருகே, அழகப்பன் நகர் ரயில்வே கேட் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சம் இல்லாத நேரங்களிலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் சரியான திசையை நோக்கி செல்ல உதவியாக இருக்கும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் தெரிவித்தார்.

சோதனை முயற்சியானது வெற்றிபெறும் பட்சத்தில் அப்பகுதி முழுவதும் உள்ள தடுப்பு களில் இடைவெளிவிட்டு இது அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் விபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக இருந்த சரவணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் பெண் காவல் ஆய்வாளர் முயற்சிக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!