இராமநாதபுரம் மாவட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கமுதி, பசும்பொன் ஆப்பநாடு விளையாட்டு கழகம் சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பசும்பொன்னில் இன்று (25.10.2020) நடந்தது.
ஆப்பநாடு விளையாட்டு கழக தலைவர் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பொது மேலாளர் கி. அழகு முனி, பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் பி.சத்தியநாதன் முன்னிலை வகித்தனர். ஆப்பநாடு விளையாட்டு கழக செயலர் கே. தவசிலிங்கம் வரவேற்றார். ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் எஸ்.ஹாரூன், பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி முதல்வர் வி.அருணாசலம் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், பசும்பொன் ஊராட்சி தலைவர் கே.டி.ராமகிருஷ்ணன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி முதுநிலை மேலாளர் எஸ்.ரவி ஆகியோர் ரத்த தான முகாமை துவங்கி வைத்தனர்.
இரத்த தானம் செய்த தன்னார்வலர் 50 பேருக்கு ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் புரவலர் தேவி எம்.உலகராஜ், தி.ஜீவா, எஸ்.திரவிய சிங்கம், மாவட்ட அமைப்பாளர்கள் ஏ.மலை கண்ணன் (பசுமை ரெட் கிராஸ்), பேராசிரியர் ஏ.வள்ளி விநாயகம் (யூத் ரெட் கிராஸ்), ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர்கள் எஸ்.அலெக்ஸ் (பரமக்குடி), எம்.பாலமுருகன் (மண்டபம்) ஆகியோர் பாராட்டு சான்று வழங்கினர். ஆப்பநாடு விளையாட்டு கழக வழிகாட்டு குழு உறுப்பினர் ரா.கலைமுருகன் தொகுத்து வழங்கினார். செயலாளர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.





You must be logged in to post a comment.