கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர் Y.ஃபாத்திமா. இவர் சமீபத்தில் ஈருலக வெற்றி நிகழ்ச்சியில் குர்ஆன் ஓதும் போட்டியில் இரண்டாம் பரிசாக ₹.3000/- பெற்றார்.
இவர் மற்ற குழந்தைகள் போல் தன் தேவைக்காக வைத்துக்கொள்ளாமல் தான் படிக்கும் பள்ளியின்
முதல்வரை சந்தித்து, அவர் பெற்ற பரிசு தொகை முழுவதையும் கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கினார்.
இந்த பிஞ்சு வயதில் இது போன்ற நற்குணங்களை வளர்ப்பதில் பெற்றோர்களும், தான் பயிலும் பள்ளியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் வாழ்கையில் நல்லொழுக்கம் உடையவர்களாக வாழ, ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, உலக கல்வியும் முக்கியம் என்பதை அறிந்து, இளம் தலைமுறையினரை பயிற்றுவிக்கும் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
————————————————————————



You must be logged in to post a comment.