தற்கொலை முயற்சியில் இருந்து தம்பதியினரை மீட்ட பழனி காவல்துறை.. குவியும் பாராட்டு..

பழனியில் தற்கொலை செய்துகொள்ளவிருந்த தம்பதியினரை உயிருடன் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனது மனைவி சுஷ்ராஜ், 2 வயது மகன் அர்த்த மௌலிநாத் ஆகியோருடன் பழனி வந்துள்ளார். அங்கு மலைக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர், பின்னர் கேரளத்தில் உள்ள தனது உறவினரை தொடர்புகொண்டு, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் பழனி காவல்துறையினருக்கு தகவல் அனுப்பினர்.

அதன்பேரில் ஸ்ரீநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் பழனி அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. விரைந்து சென்ற போலீசார் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் காப்பாற்றினர். துரிதமாக செயல்பட்டு 3 உயிர்களை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!