22.02.19 ந்தேதி வண்டி எண் – 12635 வைகை எக்ஸ்பிரஸில் D6 கோச் 101ல் சென்னையிலிருந்து மதுரை சோழவந்தானுக்கு பயணம் செய்து வந்த சரவணன்-43/19, த/பெ சுந்தரம், No 2/94 வடக்கு தெரு, தேனூர், மதுரை மாவட்டம் என்பவர் சோழவந்தானில் இறங்கி செல்லும் போது தான் கொண்டு வந்த மஞ்சள் நிற பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். அதனை வண்டியில் வந்த வண்டி பீட் தலைமைக் காவலர் 252 கிருஷ்ணன் என்பவர் எடுத்து பார்த்த போது அதில் சிவப்பு கலரில் பர்சும் அதில் பணம் 5200 ரூபாய் மற்றும் ஆதார் கார்டும் இருந்தது. பணம் மற்றும் ஆதார் அட்டையை விட்டு சென்ற மேற்படி நபருக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுக்க அவர் 22.02.19 ந்தேதி 23.30 மணிக்கு மதுரை இருப்புப்பாதை காவல் நிலையம் வந்து தக்க சான்று காட்டி அவரின் பையை பெற்று கொண்டார். இதனால் மதுரை ரயில்வே போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.