இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ள முதல் இரட்டையர்களான காரைக்காலை சேர்ந்த சென்சாய் ஸ்ரீ விசாகன் – சென்சாய் ஸ்ரீ ஹரிணி ஆகியோரை காரைக்கால் தமுமுக மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் J. ஹபிப் ரஹ்மான் தலைமையில் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து தமுமுக மாவட்ட விளையாட்டு அணி சார்பாக தமுமுக வினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹிம் மற்றும் த மு மு க மாவட்ட தலைவர் அ,.ராஜா முஹமம்து ஆகியோரால் இந்திய அளவில் சிறு வயதிலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசுகளை வழங்கி கொளரவிக்கப்பட்டது. மேலும் கராத்தே மாஸ்டர் சுஜி குமார் மற்றும் இரட்டையர்களின் தந்தை முருகானந்தம் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி தமுமுக வினர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர் .
இந்நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹிம் மற்றும் த மு மு க மாவட்ட தலைவர் அ,.ராஜா முஹமம்து ஆகியோர் மத்திய அரசு , மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் அழிந்து வரக்கூடிய தற்காப்பு கலையை பயிலும் மாணவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்து அவர்கள் பல்வேறு பதக்கங்களை பெறவும் அதன் மூலம் தற்காப்பு கலையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இனி வரும் காலங்களிலாவது மேற்கொள்ள வேண்டுமென தமுமுக விளையாட்டு அணி சார்பாக கோரிக்கை வைத்தனர்.
மேலும் காரைக்கால் மாவட்ட அளவில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கொண்டு அரசு சார்பில் போட்டிகளை நடத்தி அதில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் சிறந்தவர்களை தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு அரசு சார்பாகவே பயிற்சியும், பொருளாதார உதவியும் செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹீஸைன், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் மொய்தீன், ம ம க மாவட்ட துணை செயலாளர் இபுராஹீம், மாவட்ட அணி நிர்வாகிகள் திரு.பட்டினம் நஜிமுதீன், முஹம்மது யூசுப், முஹம்மது சர்புதீன்,முஹம்மது பயாஸ், திருநள்ளாறு அ.ராஜா முஹம்மது, செருமாவிலங்கை நிசார் அஹமது, ஆட்டோ ஷாகுல், கிளை நிர்வாகிகள் ஆட்டோ சம்சுதீன், ஆகியோர் கலந்து தங்களது வாழ்த்துகளை சாதனை படைத்த இரட்டையர்களுக்கு தெரிவித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












