நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கீழை நியூஸ் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி…

ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி, இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் பெரும்பாலான வீடுகளில் ஆற்றுத்தண்ணீர் குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிதண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், இதனால் வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லையென பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதுசம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் நேரில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே அனைத்து வார்டுகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்களை பறிமுதல் செய்தும், குடிநீர் இணைப்புகளை துண்டித்தும் சீரான குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு 22.01.2019 அன்று கோரிக்கை அனுப்பப்பட்டது, கீழைநியூஸ் தளத்திலும் பதியப்பட்டது. அதன்படி மின்மோட்டார்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது  அதிரடி நடவடிக்கை எடுத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ்.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் உத்தரவை உடன் செயல்படுத்திய பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திரு. மாகின் அபுபக்கர்,ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்களுக்கு நல்ல முறையில் சேவையாற்றிவரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கீளைநியூஸ் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!