மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் முதன் முறையாக சிறுநீரக ஸ்வாப் இடமாற்று அறுவை சிகிச்சை (Kidney Swap Transplant) மேற்கொள்ளப்பட்டது. அதாவது இந்த அறுவை சிகிச்சையில் இரண்டு நன்கொடையாளரும் இரண்டு பெறுநரும் இடம் பெறுவர். இது ஒரு சிறுநீரக நன்கொடையாளரின் இரத்த வகை பெறுநருடன் பொருந்தாதபோது (Blood Group Incompatible) இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும். (உதாரணம் A இரத்த வகை நோயாளிக்கு B இரத்த வகை நன்கொடையாளர்) ஆகையால் சிறுநீரகங்களை மற்றொரு நன்கொடையாளர் / பெறுநர் ஜோடியுடன் பரிமாறிக்கொள்ளப்படுவதே இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பம்சம்.
இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள்/பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் நீண்டகால வாழ்நாள் பராமரிப்பாக டயாலிசிஸில் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையில் உள்ளது, ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கிய சவாலாக இருப்பது பெறுநருக்கும் மற்றும் நன்கொடையாளருக்கும் ஒரே மாதிரியான இரத்த வகை அமைவது. மேலும் பொருந்தாத இரத்தவகை இருக்கும் பட்சத்தில் கேடாவர் (மூளைச்சாவு அடைந்தோர்) திட்டத்தில் பதிவு செய்து காத்திருப்பது போன்றதும் இடையூறாக உள்ளது (சராசரி காத்திருப்பு காலம் 2 – 3 ஆண்டுகள்).
இந்த இடையூறுகளை சமாளிக்க, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை 20 ஜூன் 2019 அன்று தனது முதல் சிறுநீரக ஸ்வாப் இடமாற்று அறுவை சிகிச்சையை (Kidney Swap Transplant) செய்தது, திரு. ஜெயா ஆனந்த் (B Group), திருமதி ரேகா ஜெயா ஆனந்த் (A Group) தம்பதியினருக்கும் மற்றும் திரு குமாரன் (A Group), திருமதி ஜெயலட்சுமி குமரன் (B Group) ஆகிய நால்வருக்கும் இடையில் சிறுநீரகங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. திரு. ஜெயா ஆனந்தின் மனைவி, திருமதி ரேகா ஜெயா ஆனந்த் அவர்களின் சிறுநீரகம் திரு.குமாரன் அவர்களுக்கும் திரு. குமரனின் மனைவி திருமதி ஜெயலட்சுமி குமரன் அவர்களின் சிறுநீரகம் திரு. ஜெயா ஆனந்த் அவர்களுக்கும் இடம் மாற்றி பொருத்தப்பட்டது.
24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு இருவரும் எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பினார்கள். மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். அருண் பிரசாத் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (டாக்டர். ரமேஷ் பாபு, டாக்டர். அழகப்பன் டாக்டர். சௌந்தர் ராஜன், டாக்டர் அருண் பிரசாத், டாக்டர். விஜய் ஆனந்த், மற்றும் டாக்டர் அப்துல் காதர்) , இரத்த நாள பிரிவு மருத்துவர் டாக்டர். ஸ்ரீதர் ஆகியோர் இந்த சிகிச்சையை செய்து முடித்தனர்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









