இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கும் S. கோபாலசுந்தரராஜ் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாவிலாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர்.
இவர் தொடக்கக் கல்வியை போகலூர் ஒன்றியம் சின்ன நாகாச்சியிலும், நடுநிலைப் பள்ளி கல்வியை மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இராமநாதபுரம் செய்யதம்மாள்
மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் விடாமுயற்சியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கு பெற்று இந்திய அளவில் 5ம் இடத்தை பிடித்தார். தற்போது மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப் பள்ளியின் கட்டிடம் அவர் தந்தை தானமாக கொடுத்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You must be logged in to post a comment.