இராமநாதபுரம், அக். 31-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, புதுதில்லியில் இன்று (அக்.31) சந்தித்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடிக்க தமிழக மீனவர் 37 பேரை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், 10 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அமைச்சர் முரளிதரனிடம் வழங்கி வலியுறுத்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, மீனவர் சங்கப்பிரதிநிதிகள் சேசுராஜ், என்.ஜே.போஸ், சகாயம் ஆகியோர் உடன் இருந்தனர் .


You must be logged in to post a comment.