அப்பாசாமி குழும தலைமை நிர்வாக அதிகாரியாக தொழில் அதிபர் செந்தில் குமார் நியமனம்..

அப்பாசாமி குழும தலைமை நிர்வாக அதிகாரியாக தொழில் அதிபர் செந்தில் குமார் நியமனம்..

இந்தியாவில் கண் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் முன்னணி உற்பத்தியாளரான அப்பாசாமி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (அப்பாசாமி), தங்களது தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குநராக திரு. செந்தில் குமாரை நியமிப்பதாக இன்று அறிவித்தது. அவரது நியமனம் ஏற்கனவே 15 ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கண் மருத்துவ சாதனங்கள் துறையில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மேலாண்மை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான முழுமையான அனுபவத்தைக் திரு. செந்தில், கொண்டுள்ளார். அவர் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியை நோக்கி மாற்றியமைக்கும் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மிக சமீபத்தில் கண் பராமரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஆல்கானில் வளர்ந்து வரும் சந்தைகளின் (ஆசியப் பிரிவு) தலைவராக இருந்தார்.


அப்பாசாமியின் நிறுவனர்களான திரு. அரவிந்த் கஸ்தூரி மற்றும் டாக்டர் திரு.ரெங்கசாமி ஆகியோர் கூறுகையில், “இந்தியாவிலும் உலக அளவிலும் மலிவு விலையில் உயர்தர கண் சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் PSN அப்பாசாமி இந்த நிறுவனத்தை உருவாக்கினார். கடந்த 40-க்கும் மேலான ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் சாதனைகள் மற்றும் இந்திய மற்றும் உலகளாவிய கண் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நிறுவனத்தில் அடுத்த தலைமுறையை தலைமை ஏற்கச் செய்வதற்கான திட்டத்தை முன்வைக்க இதுவே சிறந்த நேரம். இந்தியாவிலும் உலக அளவிலும் இன்னும் பலவற்றைச் செய்யத் தீவிரமாக உள்ளோம் மற்றும் புதுமைகளை அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்க முயல்கிறோம்.  என்று தெரிவித்தனர்.

கீழை நியூஸுக்காக; சென்னை, கென்னடி 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!