வாணியம்பாடியில் ஊரடங்கை மீறிதாக பழங்களை எடுத்து போட்ட நகராட்சி ஆணையரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விளக்கம் கேட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (13/05/2020) ஆணையர் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதி கொரோனா தொற்று சிகப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நேரம் வரை சில வியபாரம் நடத்த அனுமதி தரப்பட்டது. ஆனால் அதையும் மீறி சாலையோர வியபாரிகள் முரண்டு பிடித்து தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் வியபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (12/05/2020) தாசில்தார் மற்றும் போலீசாருடன் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழதள்ளுவண்டிகளை கவிழ்த்தும் பழங்களை சாலையில் போட்டும் அடாவடியாக நடந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கண்டனத்துக்கு உள்ளானார். இந்நிலையில் மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விளக்கம் கேட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (13/05/2020) ஆணையர் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகாரர்களை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன் உதவியும் செய்தார்.
வேலூரிலிருந்து செய்தியாளர் கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.