மக்கள் ஜனாதிபதி என இந்தியா முழுவதும் அனைவராலும் அழைக்கப்பட்ட APJ.அப்துல் கலாம் 15.10.1931ல் பிறந்தார். அவரின் 88வது பிறந்த நாளை யொட்டி, இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவு மண்டபத்தில் அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயர் குடும்பத்தார், ராமேஸ்வரம் ஜமாத்தார் இன்று (15/10/2018) காலை மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர் .
பின்னர் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிறந்த நாளையொட்டி நினைவு மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

You must be logged in to post a comment.