ஜனாதிபதி பெற்றுக்கொண்ட அப்துல் கலாம் பற்றிய புத்தகம்..

இராமநாதபுரம், ஆக.11- புதுச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்திருந்தார். அங்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமின் 92வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக முனைவர் ஒய்.எஸ்.ராஜன், முனைவர் ஏபிஜெ.எம்.நஜீமா மரைக்காயர் இருவரும் இணைந்து எழுதிய “Dr APJ Abdul Kalam Memories Never Die” என்ற புத்தகத்தை பெற்று கொண்டார். அப்துல் கலாமின் எண்ணங்களையும் இந்திய வளர்ச்சிக்கு அவர் அற்றிய பணிகளையும்  ஜனாதிபதி திரவுபதி முர்மு நினைவு கூர்ந்தார். இந்நிகழ்வில் முனைவர் ஏபிஜெ. எம். நஜீமா மரைக்காயர், டாக்டர் ஏபிஜெஅப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை தலைவர் ஏபிஜெ.எம் ஜெயினுலாபுதீன், பேரன்கள்  ஏபிஜெ.எம் ஜெ ஷேக் தாவூத், முனைவர் ஏபிஜெ.எம் ஜெ ஷேக் சலீம், ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ஸ்ரீப்ரியா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!