ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கீழக்கரையில் போதைப் பொருள் வியாபாரிகள் குறிப்பாக 18 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை மூளை செலவு செய்து அவர்களுக்கு தேவையான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை வழங்கி அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையில் இரு வாலிபர்களை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டது கீழக்கரை மக்களிடையே பெரும் பதட்டத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் உங்கள் அருகில் உள்ளவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



You must be logged in to post a comment.