ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதார துறை இணைந்து
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வீடுகளிலும் தெருக்களிலும் மலேரியா டெங்கு போன்ற கொசுக்கள் மற்றும் முதிர் கொசுக்களை ஒழிக்க வீட்டின் உட்புறங்களிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோய் பரவலை தடுப்பதற்காக நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் மருந்துகள் தெளிக்கும் பணியினை செய்து வருவதாக நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு தவணையாக அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதில் மலேரியா அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர், மேலும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.