விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார் மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் போதை பழக்கம் நம் பகுதியில் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் கொடுங்கள் போதைக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம் என்று கூறினார் முடிவில் பள்ளி மாணவர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினார் விழா ஏற்பாடுகளை சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார் மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன் நன்றி விழா இனிது நிறைவு பெற்றது இந்நிகழ்வில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நிருபர் தேவ சகாயம்
You must be logged in to post a comment.