இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார். அதற்கு மீன் வளத்துறை ஆய்வாளர் புகார்தாரரிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பெறவேண்டுமெனில் ரூ.5100/- கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500/- தானே என்று கேட்டும் தனக்கு தனியாக ரூ.1600/- கொடுத்தால் தான் உனக்கு அனுமதி,கிடைக்கும் என கூறியதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல்lதடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸ்ஸில்
புகார் செய்தார். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அறிவுத்தலின் பேரில் புகர்த்தாரர் மீன் வளத்துறை ஆய்வாளரை சந்தித்த போது அவர் ரசாயனம் தடவிய பணம் ரூ.1600/-ஐ லஞ்சமாக வாங்கினார் அப்போது மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது ஓம் சக்தி நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் DSP-9498215697;9498652169
INS1-9498188390
INS2-9600082798
Landline number :04567-230036
You must be logged in to post a comment.