திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக வருகிற பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் என சுமார் 2500 பேர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்நிலையில், வரும் ஜனவரி 10 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.