இராமநாதபுரத்தில் டிச.21 ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி முதல் நிலை தேர்வு..மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல்..

இராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா முதல்நிலை போட்டித்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 21 மதியம் 2 மணியளவில் ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்குபெறும் தேர்வர்கள் தங்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரியில் பணிபுரிவதற்கான அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வு கூடத்திற்கு வர வேண்டும். தேர்வாளர்கள் அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் ஆகிய சாதனங்கள் தேர்வின்போது அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்வு கொள்குறி வகை முறையில் நடைபெறவுள்ளது.

முதல் நிலை போட்டியில் ஆர்வம் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, அனைத்து அரசு கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ, செவிலியர் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வின் முடிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தலா 3 பேர் வீதம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் பங்கேற்கும் இறுதி போட்டி விருதுநகரில் டிச. 28 ல் நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் குழுவினருக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2 ஆம் பரிசு ரூ.1.50 லட்சம், 3 ஆம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும். சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதல் நிலைப்போட்டிக்கு https://sites.google.com/view/rmdthirukural-quiz/home ல் விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்குகொள்ள வருவோர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததற்கான அடையாள பிரதியை பதிவிறக்கம் செய்து ஜெராக்ஸ் பிரதியை தேர்வறைக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை 94454 77843 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!