குற்றாலத்தில் திராவிட மாடல் சாதனைகளை பறைசாற்றும் வகையில், திமுக மாணவரணி பயிலரங்கம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நவ.24 முதல் நவ.26 வரை தென்காசி குற்றாலம் கிரீன் ராயல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் திமுக மாணவரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இந்த பயிலரங்கத்தில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, ஆகிய 19 மாவட்டங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான கருத்தியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
வருகின்ற 25.11.2023 ஆம் தேதி நடைபெறும் கருத்தியல் கூட்டத்தினை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்க கொள்கைகள், லட்சியங்கள், கருத்துக்கள், இயக்கத்தின் வரலாறு, இயக்கத் தலைவர்களின் வரலாறு, கழக ஆட்சியில் இயற்றப்பட்ட சமூக நீதி, சமூக வளர்ச்சி, சமூக சீர்திருத்தங்கள், சமத்துவத்திற்கான சட்டங்கள், கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான சட்ட திட்டங்கள், அதனால் தமிழ் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், அரசியல், பாலின சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி முறையின் சாதனைகள் ஆகியவற்றினை குறித்து நான்கு தெரிந்து அரசியல் களமாட கருத்தியல் வலிமை மிக்கவர்களால் விளங்கிட மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் பயனளிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாணவரணி இணைச் செயலாளர் எஸ். மோகன், மண்டல பொறுப்பாளர்கள் அதலை செந்தில் குமார், கோகுல், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் JK ரமேஷ், தென்காசி வடக்கு மாவட்ட அமைப்பாளர் லாலா உதய குமார் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









