இராமநாதபுரத்தில்  வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு  நவ.4, 5, 18, 19ல்  வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..

இராமநாதபுரம், அக்.26- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள் 1374 வாக்குச் சாவடிகளில் நவ. 4, 5, 18,19 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி நாளை( அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள்ளன. 2024 ஜன.1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvspin) அல்லது கைபேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம நடைபெறும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளில் நவ 4,5, 18,19 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது, இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இச்சிறப்பு முகாம்களை மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!