தென்காசியில் அக்.27 விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.10.2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் தவறாது குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள. விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!