இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக பகுதிகளில் தினமும் சேகரமாகும் மலக்கழிவுகளை சுகாதார முறைப்படி அதற்கென உள்ள பிரத்யேக வாகனங்கள் மூலம் அகற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுகாதார முறையில் நச்சுத்தொட்டி கட்டாமல் திறந்த வெளிகளிலோ நகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களிலோ மனித கழிவுகளை விடுவது மனித கழிவுகளை மனிதனே அகற்றுலை தடை செய்தல் மற்றும் புனர்வாழ்வு வழங்குதல் சட்டம் 2013 பிரிவு (5)-ன் படி குற்றமாகும். இத்தவறு கண்டறியப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதே நிகழ்வு தொடர்ந்தால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கீழக்கரை நிர்வாகம் அறிவித்ததுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









