தென்காசி மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும், கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் வேலம்மாள் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கும், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆலங்குளத்திற்கும், சங்கரன் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்செல்வம் மேலநீலித நல்லூருக்கும், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருமலை குமார் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஆகவும், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மா. மாணிக்கவாசகம் மாவட்ட ஊராட்சி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) திலகராஜ் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆகவும், மேலநீதிநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஜெயராமன் மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் ஆகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், நிர்வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









